Date:

பிரான்ஸிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்தவருக்கு ஏற்பட்ட சோகம் ! திடீர் மரணம்

 

 

 

பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை – அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 1990 அவசர அம்பியூலஸ் வண்டி மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...