Date:

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் ! ஏற்பட்டுள்ள ஆபத்து

 

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என வரையறுத்துள்ளது.

எனினும் இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதிகளவு சீனி பாவனையால் இலங்கையில் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாய் சுகாதார தினத்திற்காக நடைபெற்ற மாநாட்டில் நிபுணர் இந்த தகவலை வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...