அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் (Leo Varadkar), தனது பதவியை விரைவில் இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஓர் அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
பைன் கோயல் கட்சியின் அடுத்த தலைவர் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லியோ வர்த்கர் தெரிவித்துள்ளார்.