Date:

நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

 

 

 

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முடிவைத் தீவிரப்படுத்திய அரச மருத்துவ அதிகாரிகள்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

இலங்கை பிரதமர்களின் பட்டியலில் மிகவும் கல்வி கற்றவர் ஹரிணி அமரசூரிய மட்டுமே!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர்...

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...