வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.
இன்று காலை வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்று தனது எதிர்பினை வெளியிட்டார்.
இதையடுத்து சபையில் உரையாற்றிய சாள்ஸ் எம்.பி “எமது போராட்டத்தையடுத்து நீதிமன்றத்தால் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.