ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலகேவத்தை பிரதேசத்தில் நேற்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 கிலோ 3 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பின்னர் ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய பிரேண்கம்பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான 5 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 4 கடனட்டைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் சிறையிலிருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.