Date:

மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து! ஐவர் காயம்

 

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் விபத்து ஒன்று இன்று  இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானத்தில் மோதுண்டத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் விபத்துச் சம்பவத்தில் அருகிலிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வட்டா ரக வாகனமும், பேருந்தின் முன்பகுதியும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய...