Date:

தொடரும் ‘யுக்திய’ சுற்றிவளைப்பு ! 1071 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1071 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 986 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 85 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1071 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் 1 கிலோ 785கிராம், பனி 261 கிராம் 104 மி.கி, கஞ்சா 14 கிலோ 606 கிராம், மாவா 104 கிராம் 500 மி.கி, துலே 502 கிராம் 080 மி.கி, மதன மோதக 291 கிராம், சாம்பல் 2 கிராம் 898 மி.கி,  14,144 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 986 சந்தேக நபர்களில் 107 சந்தேகநபர்கள் பிடியாணை அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை போதைக்கு அடிமையான 42 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 42 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...