Date:

இலங்கையில் அதிகரிக்கும் இணைய மோசடி சம்பவங்கள் !

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும்,

பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...