Date:

‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ! 1101 சந்தேக நபர்கள் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1101 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1030 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 1101 சந்தேக நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது, 427 கிராம் 937 மில்லி கிராம் ஹெராயின், பனி 294 கிராம் 196 மில்லி கிராம், கஞ்சா 39 கிலோ 206 கிராம், மாவா 448 கிராம் 11 மில்லி கிராம், துலே 34 கிராம் 495 மில்லி கிராம், மதனா மோடகா 82 கிராம் 85 மி.கி, 884 மாத்திரைகள், 50  கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 1030 சந்தேக நபர்களில் 46 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 43 சந்தேக நபர்களும் இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...