ஜே ஜே அமைப்பு மற்றும் வை.எம்.எம்.ஏ மத்திய கொழும்பு கிளை ஒத்துழைப்புடன், கொழும்பு 10 இல் உள்ள தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிலைய இயக்குநர் சார்லஸ் நுகவேல மற்றும் நிர்வாக அதிகாரி திருமதி அனோமா விக்கிரமசிங்க ஆகியோருக்கு குறித்த மருந்து உபகரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஜே.ஜே. அமைப்பின் இயக்குனர் கலாநிதி ஐ.ஒய்.எம். ஹனிஃப், ஒய்.எம்.எம்.ஏ அதிகாரிகள் தலைவர் திரு. நசாரி கமில், துணைத் தலைவர் அஹமது சலாஹுதீன்மற்றும் உதவி செயலாளர் திரு. அப்துல் அலீம் ஆகியோர் கையளிக்கும் விழாவில் பங்கேற்றனர்.
