Date:

4 வயது சிறுவனுக்கு எமனாக வந்த லொறி ! – நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சோகம்

புத்தளம் – கற்பிட்டி – நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் நேற்று  மாலை உயிரிழந்துள்ளார்.

பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், தனது சிறிய துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த  சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...