Date:

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை ! 652 சந்தேக நபர்கள் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 518 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 134 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 652 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சுற்றிவளைப்பின்போது 221 கிராம் 375 மில்லி கிராம் ஹெராயின், 173 கிராம் பனி 926 மி.கி, கஞ்சா 09 கிலோ 324 கிராம், மாவா 102 கிராம் 34 மி.கி, மதன மோதக 39 கிராம் 75 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 518 சந்தேக நபர்களில் 08 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 09 சந்தேக நபர்களும் இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 134 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்பட்டவர்களில் 06 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்றவர்கள், 114 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுடன் தொடர்புடைய 114 பேர் மற்றும் குற்றங்களுக்காக 14 சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்.

 

 

 

NewsTamil Ad

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...