Date:

தீவிரமடையும் ‘யுக்திய’ நடவடிக்கை ! 653 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 653 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 530 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 123 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 653 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 136 கிராம் 250 மில்லி கிராம் ஹெராயின், ஐஸ் 86 கிராம் 600 மி.கி, கஞ்சா 05 கிலோ 072 கிராம், மாவா 01கிலோ 496 கிராம், துலே 06 கிராம் 200 மி.கி, மதனமோதக 100 கிராம், 167,369 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 530 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...