Date:

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் கட்ட விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நேற்று (27ஆம் திகதி) வரை சுமார் 30,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 8,750 விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான...

ரஷ்யாவின் கரையோரப் பகுதியில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான...

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...