Date:

புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலை குறைப்பு ? விடுக்கப்பட்ட கோரிக்கை

இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை. மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை புத்தாண்டை கொண்டாடவுமில்லை.

மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.

எனவே இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற பணிவான கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.

பொருளாதாரம் முன்னேற்றமடைந்ததன் பின்னர் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.

கூட்டத்தை கூட்டுவதால் ஜனாதிபதியாகி விட முடியாது என்பதை எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என்பதில் மாற்றமில்லை என குறிப்பிட்டார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...