Date:

நண்பனின் உயிரை பலியெடுத்த போதை நண்பன் ! யாழில் சம்பவம் !

யாழ். தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு அவரது நண்பர் மீண்டும் போதைப்பொருள் கொடுத்த நிலையில், குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற போது, போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளார்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட இளைஞன் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

இதையடுத்து , இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து, தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

தாயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்று, மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த மற்றைய இளைஞனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

வைத்திய அறிக்கையில் குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...