Date:

பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் !

பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அடிப்படையில் வசிக்கும் 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டு பிணையில் வந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பொரளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...