எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

3,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

‘கேஸ் குட்வில்’ எனும் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அதிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

 

விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட வீட்டு மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களாக விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும், விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தமது பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Breaking நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (13) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு. 12.5 kg - 1775 ரூபாவினால் அதிகரிப்பு - புதிய விலை 6740...

கொழும்பில் வெள்ளப்பெருக்கு – (AI) காணொளிகளை வெளியிட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் பயன்படுத்தி, கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக சித்தரிக்கும் போலியான காணொளிகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்...