Date:

சிறை மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் தங்கும் அவல நிலை !

இலங்கையின் சிறைச்சாலை மருத்துவமனையின் தற்போதைய கொள்ளளவு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறைச்சாலை மருத்துவனையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 350 ஆக உள்ளது.

வழமையான கொள்ளளவான 185 கைதிகள் என்ற அளவை விட அதிகமானது என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறை மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் மருத்துவமனையின் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், நோயாளிகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், மட்டுமே நெரிசல் குறையும் எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இடப்பற்றாக்குறை காரணமாக சிறை மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை தங்க வைக்கும் அவல நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...