ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி இன்றைய தினம் ஹட்டனில் நடைபெறவுள்ளது.
முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை (16) கொழும்பில் இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) கருத்து தெரிவிக்கையில்,
‘பாடுவோர் பாடலாம் என்ற இசை நிகழ்ச்சி ஹட்டன் மாநகரில் நடைபெறவுள்ளது.
அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக பல கட்ட குரல் தேர்வுகள் இடம்பெற்றதுடன் அதிலிருந்து 50 பாடக படகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகலருக்கும் சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும் எனவும் ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) தெரிவித்துள்ளார்.