Date:

யாழ். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தார் ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“ யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

43 மீனவர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகின்றேன்.

இலங்கை போலீசார் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...