4 யுனிட் தண்ணீருக்கு 75,000 ரூபாய் நீர் கட்டணம் வசூலிக்கப்படுள்ள சம்பவம் ஹங்கம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிக்கு கடந்த 11 ஆம் திகதி வழங்கப்பட்ட நீர் கட்டண பட்டியலில், நீர் கட்டணம் 75,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குடும்பத்தினரால் ஹங்கம ஹதகல நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் பராமரிப்பு அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குடும்பத்தினர் கூறுகையில் தாம் தண்ணீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.