Date:

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 60 ரூபாயாக காணப்படுகிறது.

எனினும் சந்தைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதன் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...