Date:

போதைப்பொருள் இல்லாததால் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் !

குருணாகல் பஸ் நிலையத்திற்கு அருகில் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அதனை உட்கொள்வதற்காக தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...