Date:

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு !

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமூக வலைதளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடபட பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைகள் திணைக்களம், மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது.

எனவே, பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...