இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திரதினத்தையொட்டி நுவரெலியா விக்டோரியா பூங்கா முன்றலில் உட்புற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட அவர்கள் கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து
மேலதிக அரசாங்க அதிபர் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாநகர சபை உறுப்பினர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சுதந்திர தினம் நினைவாக மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள்.
நானுஓயா நிருபர்
