Date:

உக்ரைன் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு : தாக்குதலுக்கு மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது !

 

ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மேற்குலக நாடுகள் வழங்கி ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

தாக்குதல் நடந்த போது வெதுப்பகம் அமைந்துள்ள கட்டடத்தில் பல பொதுமக்கள் இருந்தனர் எனவும் ரஷ்யா மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...

முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3...

மைத்திரியும் புறப்பட்டார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து...