ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) இன்று தனது 82வது வயதில் காலமானார்.
நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) உயிரிழந்துள்ளார்.
தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்ட பின்னர், அதற்கு சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்கா செல்ல உள்ளதாக ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) கூறியிருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளார்.
ஹேஜ் காட்ஃபிரைட் ஜிங்கோப் (Hage Gottfried Geingob) கடந்த 2015 ஆம் ஆண்டு நமீபியாவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.