பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை தனது 76 ஆவது சுதந்திரத் தினத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ள 76 ஆவது சுதந்திர தினத்தில் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
ஏனினும் இந்நிகழ்வில் ஜனாதிபாதியின் உரை இடம்பெறமாட்டாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள 5 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிகதி கொள்ளை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளதால் சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
