‘டெசேர்ட் நைட்’ பயிற்சி என்ற பெயரில் ஐக்கிய அரபு இராச்சியம்,
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளதும் விமானப்படை
கள் கூட்டுப் பயிற்சியொன்றை நடத்தியுள்ளன.
விமானப் படைகளின் வலிமையை வெளிப்படுத்துவ
தோடு வளர்ந்து வரும் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளை
மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட இப்பயிற்
சியின் போது மூன்று நாடுகளதும் விமானப்படைகளுக்கு இடையில்
ஒருங்கிணைப்பு மற்றும் செயற் பாட்டு நிலைகளில் முன்னேற்றங்
கள் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு இப் பயிற்சியில் பங்குபற்றியவர்களுக்கு
இடையில் செயல்பாட்டு அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடை
முறைகளை பரிமாறிக் கொள்ளவும் முடிந்துள்ளது என்று இந்திய பாது
காப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானப்படை
விமானங்கள் அல் தப்ரா விமான தளத்தை அடிப்படையாகக்
கொண்டும் இந்திய விமானப் படை விமானங்கள் இந்திய விமானத்
தளங்களில் இருந்து இயக்கப்பட்டு அரபுக்கடல் பரப்பிலும்
ஒருங்கிணைந்த வகையில் இப்பயிற்சியில்ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.