டெலிகொம் நிறுவனத்தின் 53.23 சதவீத பங்குகளை போட்டித்தன்மையான இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்தீரப்படுத்தல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்யும் இறுதி தீர்மானத்தில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அமைச்சு மட்டத்தில் துறைசார் குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் லய்கா கூட்டிணைவுக்கு சொந்தமான பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்னெஷனல் நிறுவனம் என்பன முன்னிலையாகியிருந்தன.
இதற்கமைய நிதி அமைச்சின் செயற்திட்ட விசேட குழு மற்றும் அமைச்சரவை நியமித்த விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக்கொள்வற்கு பூரண தகுதி உள்ள போட்டித்தன்மையான நிறுவனங்களாக ஜியோ பிளாட்போர்ம் நிறுவம் மற்றும் சீனாவின் கொட்யூன் ஹோல்டிங் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம் இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகரும்,முதனிலை தொழிலதிபருமான முகேஸ் அம்பானிக்கு சொந்தமானது. போஃபஸ் வர்த்தக வலைத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய உலகில் செல்வந்தர்களின் பட்டியலில் முகேஸ் அம்பானி 11 ஆவது இடத்தில் உள்ளார்.