Date:

இன்று காலை முதல் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு !

இன்று (01) காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க கோரி இதற்கு முன்னர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று(01) முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு அகில இலங்கை தாதியர் சங்கம் ஆதரவளிக்காது என சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி தெரிவித்துள்ளார்.

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...