Date:

சபாரி ஜீப் கட்டணம் அதிகரிப்பு !

 

யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்
2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த நேற்று (29) தெரிவித்தார்.

அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும் ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபாய் வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000ல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யால சபாரி ஜீப் சங்கத்தில் சுமார் 475 ஜீப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பால் ஜீப் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...