ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கவிருந்த சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நடவடிக்கை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் சுந்திர தின ஒத்திகை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவிருந்ததாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.
எனினும் அந்த ஒத்திகை நடவடிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை காலிமுகத்திடல் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.