Date:

ஐவர் கொலை : மேலும் இருவர் கைது !

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 2 சந்தேகநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது, ​​அவர்களிடம் இருந்து 9 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரான கத்தி என்பன காணப்பட்டன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...