Date:

சமூக வளைத்தளங்களில் வைரலாகும் சனத் நிஷாந்தவின் கடைசி செல்பி !

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே இவ்வாறு வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...