எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு 360,000 மாணவர்களுக்கு வீசாக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2025இல் வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கை தொடர்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.