Date:

இலங்கையர்களே அவதானம் : தொலைபேசி அழைப்புக்களால் வரும் ஆபத்து !

இலங்கையில் சில மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.

தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறி அழைப்பேற்படுத்தும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் ஒரு போதும் கைது செய்யப்படும் நபர்கள் தொடர்பில் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி கூறுவதில்லை.

இதனால் இவ்வாறான அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...