Date:

முச்சக்கரவண்டிகளுக்கான QR குறியீடு அறிமுகம் !

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரினதும் பதிவு மற்றும் தரவு முறைமை தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழில்சார் சபைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக நேற்று (16) இடைக்கால துறைசார் வழிகாட்டல் குழு ஸ்தாபன நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும், முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிபுணத்துவ அமைப்பினால் முச்சக்கர வண்டி சாரதிகள் இணையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “கரு சாரு” திட்டத்தின் கீழ் இந்த வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்தக் குழு அமைக்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...