யேமன் கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணை ஒன்றின் ஊடாக குறித்த கப்பலை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாக வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கு எதிராக, அண்மையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தியிருந்தது.
குறித்த தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இது அமைந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.