இன்னும் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தை பெறவில்லை

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.

 

 

தற்போது வரை சுமார் 13 மில்லியன் நபர்கள் TIN இலக்கத்திற்காகப் பதிவாகியுள்ளதாகவும், நாட்டில் 18 வயது பூர்த்தியடைந்த மக்கள் தொகை சுமார் 17 மில்லியனாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

இதற்கமைய, மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டும் என அடையாள காணப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

தற்போது வரை 13 மில்லியன் நபர்கள் அதாவது 130 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TIN) பெறுவதற்காகத் திணைக்களத்தில் பதிவாகியுள்ளனர்.

 

 

 

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 17 மில்லியன் அதாவது 170 இலட்சம் மக்கள் தொகை உள்ளது. இதற்கமைய, மேலும் சுமார் 4 மில்லியன் பேர் பதிவாக வேண்டிய நபர்களாக நாங்கள் அடையாள கண்டுள்ளோம்.

 

 

 

கடந்த காலத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே நாங்கள் TIN இலக்கத்தைக் கட்டாயப்படுத்தினோம்.

 

 

 

ஆனால் சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கம் ஒன்றைப் பெற வேண்டும்.

 

 

 

இது தொடர்பாக பலரிடையே ஒரு தேவையற்ற பயம் ஏற்பட்டிருந்தது.

 

 

 

இப்போதும் அத்தகைய பயம் நிலவுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவாகும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தகைய தேவை எதுவும் இல்லை.

 

 

 

வரி முறையை முறைமைப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டப்பூர்வ தேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.       அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள...

தட்டம்மை பரவல் – கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள்

தட்டம்மை தொற்று பரவல் காரணமாக, 3 சிறைச்சாலைகளின் எந்தவொரு கைதியும் இன்றைய தினம் (9) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்...