அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் 75 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புயல் தாக்கத்தினால் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில், சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது
இதுவரையில் சுமார் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் புயலினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.