வெள்ளம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மட்டக்களப்பு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனகயா இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த உதய தேவி கடுகதி தொடருந்து என்பவற்றின் சேவைகள் நேற்று முதல் இரத்து செய்யப்பட்டன.
மட்டக்களப்பு – திருகோணமலை ரயில் மார்க்கத்தில் புனானை மற்றும் வாழைச்சேனை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்தநிலையில், குறித்த பகுதியில் வெள்ள நீர் குறைவடைந்துமையினால் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.