முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நானுஓயா வாழைமலை பிரதேசத்தில் புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி வண்டி வீதியை கடக்க முயன்ற போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு
இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மீண்டும் இவ் புகையிரதக் கடவையில் பல விபத்துக்கள் இடம் பெற்று பல உயிர்கள் காவு கொள்வதற்கு முன்னர் குறித்த இடத்தில் உரிய பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
( நானுஓயா நிருபர் )