Date:

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் !

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன்,

முன்னர் கடந்த ஆண்டு இறுதியில் சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் சேவையில் ஈடுபடாது ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிவகங்கை கப்பலானது பெப்ரவரி முதலாம் திகதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து,நான்கு மணி நேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும் என்று இந்தப் கப்பல் சேவையை இயக்கும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

150 பயணிகள் இந்தப் படகில் பயணிக்கமுடியும் என்பதுடன், ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செவ்லமுடியும்.

விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

வாரம் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.

ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய் அல்லது 26 ஆயிரம் இலங்கை ரூபாய் கட்டணமாக அறவிடப்படும்.

அரச வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின் விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் அதாவது சுமார் 18,500 ரூபா அளவுக்குக் குறைவுக்கள்ளோம்” என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி...

ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய எம்.பிக்கள்

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம்...

தீப்பற்றி எரியும் விமானம்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல்...

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...