Date:

இளம் பெண்ணின் சடலம் மர்மமான முறையில் தோண்டியெடுப்பு!

இறுதிக் கிரியைகளை நிறைவடைந்து அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பண்டாரவளை, பதுலுகஸ்தென்ன பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்தப் பகுதியில் வசித்த 25 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த புதன்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

பின்னர் அடுத்த வியாழன் யுவதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் இன்று காலை யுவதியின் தந்தை, அயலவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நிலையில், ​​மகள் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்றுள்ளார்.

அங்கு நெஞ்சை உலுக்கும் காட்சியை அவர் பார்த்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதை கண்ட தந்தை, அயலவர்களிடம் இதுபற்றி அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, சடலத்தை யாரேனும் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர் அயல் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூடியையும் அதே வீட்டில் மண்வெட்டியையும் பயன்படுத்தி குழியில் இருந்த மண்ணை அகற்றி யுவதியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலம் பண்டாரவளை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் பண்டாரவளை பதில் நீதவானினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...