Date:

ஐந்தாவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் ஐந்தாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது.

350 ஆசனங்களை கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றதில் 50 ஆசனங்கள் பெண் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (7) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 120 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் பாதி பேர் பெண்கள் எனவும் பங்களாதேஷ் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

நேற்று (7) நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ​​அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சிகள் 152 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, பங்களாதேஷில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் 76 வயதான ஷேக் ஹசீனா இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...