Date:

நாட்டில் இன்று முதல் கன மழை !

நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...