Date:

தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திகுத்து !

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார்.

அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும் போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மர்ப நபர் லீ ஜே – மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார்.

அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இரத்தம் வெளியேறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அவரது கழுத்தை அழுத்தி பிடித்துள்ளனர்.

உடனடியாக சிகிச்சைக்கான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...